TNPSC Daily Current Affairs in Tamil, March 4, 2017 - TNPSCGURU.iN
- ஹம்போல்ட் பென்குயீன் ( Humboldt Penguin)
- இது தென் அமெரிக்காவை சொந்தமாய் கொண்ட ஒரு வகை பென்குயீன் இனம்
- இந்த இனம் IUCN ஆல் Vulnerable இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது
- கஹிர்மாதா சரணாலயம் ( Gahirmatha Sanctuary)
- இது ஒடிசா மாநிலத்தில அமைந்துள்ளது
- ஆலிவ் ரிட்லி வகை ஆமைகளின் முட்டையிடும் பெரிய இடங்களில் இதுவும் ஒன்று
- நிரஞ்சன் மர்டி (Niranjan Mardi)
- இவர் தமிழ்நாட்டின் புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சையத் ராத் அல் ஹுசைன் (Zeid Raad Al Hussain)
- இவர் மனித உரிமைகள் ஆணையத்தின் ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர்
- செர்ஜி கில்யாக் (Sergey Kislyak)
- இவர் அமெரிக்காவின் ரஷிய தூதர்
- நிஹன் சரின் (Nihan Sarin)
- இவர் கேரள மாநிலம் திரிசூரை சார்ந்த 12 வயதான சதுரங்க வீரர்
- இவர் சர்வதேச ‘செஸ் மாஸ்டர்’ தரத்திற்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளார்
- ஏர் இந்தியா 173
- ஏர் இந்தியா 173 முழுவதும் பெண் பணியாளர்களைக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளது
- இந்த முழு குழு, தரை ஊழியர்கள் உட்பட அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது
- இது தனது பயணத்தை பிப்ரவரி 27, 2017 அன்று புது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சான் பிரான்சிஸ்கோ நகரம் நோக்கி புறப்பட்டது
- மார்ச் 3, 2017 அன்று இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..