TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 15
2018 – Tamil (tnpscguru.in)
1) விலை ஆதரவு அமைப்பு
- தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் ( National Agricultural Cooperative Marketing Federation of India (NAFED) ) கீழ் மத்திய அரசு விலை ஆதரவு அமைப்பு (PSS) தமிழ்நாட்டின் பயிர்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கு வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது
- குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சந்தை விலை குறைவாக இருக்கும்போது இந்தியாவின் தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு விவசாயிகளிடம் இருந்து பயிர்களை நேரடியாக வாங்கிக்கொள்ளும்
- திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்றாவது வருவாய் பிரிவு ஆரணியை தலைமையிடமாக கொண்டு திறந்து வைக்கப்பட்டது.
- திருவண்ணாமலை மற்றும் செய்யார் ஆகிய இரண்டு பிற வருவாய் பிரிவுகள் உள்ளன
- மூன்றாம் வருவாய் பிரிவில் ஆரணி, பொலூர், கலசப்பாக்கம் மற்றும் ஜமுனாமரத்தூர் ஆகியவை அடங்கும்
- பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் ஆயுஷ்மன் பாரத் எனப்படும் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாபூர் என்னும் இடத்தில் துவங்கி வைத்தார் திறந்து வைத்தார்
- ஆயுஷ்மன் பாரத்தின் பிரதான நோக்கம் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களின் நெட்வொர்க்குகளை முதன்மை சுகாதார பராமரிப்பு மற்றும் காப்பீட்டை உள்ளடக்கிய மக்களுடன் இணைப்பதாகும்.
- கடல் ஆமைகள் பூமியின் காந்தப்புலனை பயன்படுத்தி அவைகள் பிறந்த இடங்களை கண்டறிகின்றன என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்
- 55.52 விநாடிகளில் மூன்று புல்லட் மோட்டார் சைக்கிள்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 36 போர்வீரர்களை சுமந்து சென்று எல்லைப் பாதுகாப்பு படை ஜன்பாஸ் மோட்டார் சைக்கிள் வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்
- இது இந்திய இராணுவத்தால் பதிவு செய்யப்பட்ட முந்தைய சாதனையை முறியடித்துள்ளது
No comments:
Post a Comment
Post your feedback and doubts in the comment box below.
Thanks for visiting our Website..