TNPSC Current Affairs – April 17 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, April 18

TNPSC Current Affairs – April 17 2018 – Tamil (tnpscguru.in)

TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 17 2018 – Tamil (tnpscguru.in)


1) மேகாலயா சமூகம் - நிலப்பரப்பு மேலாண்மை திட்டம் செயலாக்கம்
  • மேகாலயா சமூகம் - நிலப்பரப்பு மேலாண்மை திட்டம் செயலாக்கத்திற்கு என இந்திய அரசு உலக வங்கியிடம் 48 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
  • மேகாலயாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பரப்பில் சமூகங்கள் தலைமையிலான நிலப்பரப்பு மேலாண்மைகளை பலப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் ஆகும்
2) கிராம் ஸ்வராஜ் அபியான் தொடங்கப்பட்டது ( Gram Swaraj Abhiyan )
  • அரசாங்க நலன்புரித் திட்டத்தில் நன்மை பெற, நாட்டின் பின்தங்கிய கிராமங்களைச் இந்த திட்டத்துடன் சேர்க்கும் நோக்கத்துடன் ஏப்ரல் 14 ஆம் நாள் கிராம் ஸ்வராஜ் அபியான் தொடங்கப்பட்டது
  • பிரம்மன் மந்திரி உஜ்ஜ்வல யோஜனா, சவுபாக்கியா, உஜாலா திட்டம், பிரதான் மந்திரி ஜான் தண் யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சரக்ஷா பீமா யோஜனா மற்றும் மிஷன் இண்டரதுஷ் ஆகிய ஏழு திட்டங்களை இது உள்ளடக்கியுள்ளது.
3) நீர்வள ஆதாரங்களில் கிழக்கு மாகாணங்களின் முதல் பிராந்திய மாநாடு
  • நீர் ஆதாரங்களை குறித்த கிழக்கு மாநிலங்களின் முதல் மாநாடு ஆகும்
  • பெருகி வரும் தண்ணீர் பிரச்ச்சனைகளை குறித்து இதில் பேசப்பட்டது
  • இந்த மாநாடு கல்கத்தாவில் வைத்து நடைபெற்றது
  • மேற்கு வங்காளம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் உள்ள நீர் வளங்களைப் பற்றிய உட்கட்டமைப்பு வசதிகளை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்
4) காஞ்சிபுரம் பகுதியில் விதை வங்கி திட்டம் ( Seed Bank Project )
  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாரம்பரிய நெல் வகைகள் பாதுகாக்க ஒரு விதை வங்கி திட்டம் துவங்கப்பட்டுள்ளது
  • இந்த திட்டம் பல்லுயிர் பல்வகை சர்வதேச நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்நாடு கிரீன் காஸ் அறக்கட்டளையால் செயல்படுத்தப்பட்டது வருகிறது
5) உலக ஹேமொபிலியா நாள் ( World Haemophilia Day ) - ஏப்ரல் 17
  • உலக ஹெமோபிலியா தினம் என்பது ஹீமோபிலியா மற்றும் பிற மரபுவழி இரத்தப்போக்கு கோளாறு பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க உலகளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது
  • ஹீமோபிலியா என்பது ஒரு மரபணு நோயாகும். உடலில் ரத்தம் உறையும் தன்மையை பாதிக்கும் ஒரு விட்டிஹா நோய் ஆகும்
  • 2018 உலக ஹீமோபிலியா தின நோக்கம் 'அறிவு பகிர்தல் நமக்கு வலுவானதாக்குகிறது' ( ‘Sharing Knowledge Makes Us Stronger’)
6) பருவமழை - சாதாரண மழைக்காலம்
  • இந்திய வானிலை ஆய்வு நிலையம் நாட்டில் இந்த ஆண்டு சாதாரண மழைக்காலமாக காணப்படுவதாக கணித்துள்ளது
7) பாபர் குரூஸ் ஏவுகணை ( Babur Cruise Missile )
  • பாபர் குரூஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
  • இது வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான ஆயுதமாகவும் பயன்படும்
  • இது 700 கி.மீ. வரை சென்று தாக்கக்கூடியது

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad