NMMS 2019 Exam - National Means Cum Merit Scholarship Scheme Exam 2019 - Tamil nadu NMMS 2019 Exam - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Wednesday, September 25

NMMS 2019 Exam - National Means Cum Merit Scholarship Scheme Exam 2019 - Tamil nadu NMMS 2019 Exam


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, 2019
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)

செய்திக் குறிப்பு
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 01.12.2019 (ஞாயிற்றுக்கிழமை) இத்தேர்விற்க்கான வெற்று விண்ண
ப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய  கடைசி நாள். 16.10.2019. கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காண்க.

நாள். 24.09.2019 சென்னை -600 006.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 600 006 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, டிசம்பர் 2019
NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)
செய்தி அறிவிக்கை
தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு(NMMS) அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு தேதி 01.12.2019. இத்தேர்விற்கான வெற்று விண்ண ப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் : (Eligibility)
1. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ) 2019-2020 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப வருமானம் ஆண்டொன்றுக்கு ரூ.1,50,000/- க்கு (ரூபாய் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) மிகாமல் இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.
2. 2018-19-ம் கல்வியாண்டில் ஏழாம் வகுப்பு பயின்று, முழு ஆண்டுத் தேர்வில் SC/ST மாணவ / மாணவிகள் 50% (ஐம்பது சதவீதம்) மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55% மதிப்பெண்களும் அல்லது அதற்கு மேலும் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
1. தலைமை ஆசிரியர்கள் முதல்வர்கள் தமது பள்ளி EMIS- ல் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதையும் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள Management (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ) Code - சரிபார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்விவரங்கள் இல்லாத பள்ளிகளின் தேர்வர்கள் ஆன்லைனில் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாது.
2. NMMS-தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று விண்ண ப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
3. தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
4. புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தேர்வுக் கட்டணம் ரூ.50/- உடன் 16.10.2019-க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
5. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஆன்-லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் இணையதள முகவரி குறித்தான விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.
6. பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாட்கள் குறித்த விவரம் பெறப்பட்டவுடன், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் அருகிலுள்ள வட்டார வள் மையங்களின் (BRC) உதவியுடன் இணையதள வசதி கொண்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தங்கள் பள்ளி மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் மூலமாகப் பதிவு செய்தல் வேண்டும்.

முக்கிய நாட்கள்:
வெற்று விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய நாட்கள் - 11.10.2019 முதல் - 26.09.2019 வரை
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக் கட்டணம் தேர்வர்களிடமிருந்து பெற கடைசி நாள் - 16.10.2019


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 2019 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்

1. NMMS தேர்வில்:
2019-20 கல்வியாண்டில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியர்
கலந்து கொள்ளலாம்.
2. உதவித் தொகை:
தேர்வில் வெற்றிபெறும் மாணவ / மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு
வரை மாதம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

3. தகுதி:
1. அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8ஆம் வகுப்பு பயில வேண்டும்.
2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. 7 ஆம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் SC / ST பிரிவினர் 50 சதவீதம் மதிப்பெண்களும் மற்ற பிரிவினர் 55 சதவீதம் மதிப்பெண்கள் | அதற்கு இணையான தரம் பெற்றிருக்க வேண்டும்.
4. விண்ணப்பிக்கும் முறை:
இத்தேர்வில் பங்கு பெற மாணவ / மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
5. தேர்வுக் கட்டணம்:
ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ண ப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமையாசிரியரிடம் செலுத்த வேண்டும்.
6. தேர்வு முறை மற்றும் நேரம்:
இத்தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி 1 - மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு (Mental Ability Test) (MAT) - காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை
பகுதி II - படிப்பறிவுத் தேர்வு (Scholastic Aptitude Test) (SAT) - காலை 11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
7. பாடத்திட்டம் : (Syllabus)
மனத்திறன் படிப்பறிவுத் தேர்வு பகுதி I மற்றும் படிப்பறிவுத் தேர்வு II-னைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும். மனத்திறன் தேர்வைப் பொறுத்தமட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும்.


No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad